புதுடில்லி : இந்தியாவின் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் உடைந்து நொறுங்கி அணைக்கட்டு ஒன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) மோதியதைத் தொடர்ந்து சுமார் 150 பேர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கற்பாறைகள், வேகமாகப் பாய்ந்த வெள்ளம், தூசு என ஒட்டுமொத்தமாக பனிப்பாறைகள் மிக விரைவாக உடைந்து நொறுங்கி விழுந்ததால் யாருக்கும் முன்னெச்சரிக்கை விடுக்க முடியவில்லை என சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் நீர் மின்சார அணைக்கட்டு ஒன்றில் பணிபுரிந்தவர்களும் அந்த இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டும் மற்ற பணிகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்த கிராமத்தினரும் இருந்தனர். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)