Home Featured இந்தியா “அமீர்கானை அறைந்தால் 1 லட்சம் தருகிறோம்” – சிவசேனா பகிரங்க அறிவிப்பு!

“அமீர்கானை அறைந்தால் 1 லட்சம் தருகிறோம்” – சிவசேனா பகிரங்க அறிவிப்பு!

940
0
SHARE
Ad

26aamirமும்பை – இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ள நடிகர் அமீர்கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

”நாட்டில் மத சகிப்புத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. சமீபகால சம்பவங்களால் அச்சம் அடைந்துள்ள என் மனைவி, ‘நாம் இந்தியாவைவிட்டு வெளியேறி விடலாமா’ என்று கேட்கிறார். எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார்” என்று பொது மேடை ஒன்றில் அமீர்கான் கருத்து தெரிவிக்க அது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனது டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர்கானிற்கு சிவசேனா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் தங்கி இருக்கும் விடுதியை முற்றுகையிட்ட அந்த அமைப்பினர், அமீர்கானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

amrஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவ சேனா கட்சியின் தலைவர் ராஜீன் தன்டன், “விடுதியில் உள்ள ஊழியர்களுக்கும், மேலாளருக்கும், அமீர் கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள், அமீர்கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதனால் அமீர்கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.