Home Featured கலையுலகம் “இந்தியாவில் தான் பிறந்தேன்; இங்கு தான் மரணிப்பேன்” – அமீர்கான் உருக்கம்!

“இந்தியாவில் தான் பிறந்தேன்; இங்கு தான் மரணிப்பேன்” – அமீர்கான் உருக்கம்!

974
0
SHARE
Ad

aamirkhanமும்பை – இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்து யார் கருத்து கூறினாலும், பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்க வேண்டி இருக்கும். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் இதுவரை தாங்கள் சந்திக்காத விமர்சனங்களை சந்திக்க நேரிடம். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் நடிகர் அமீர்கான்.

‘இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது’ என்று கூறப்போக, கடுமையான எதிர்ப்பலைகளை சந்தித்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய அமீர்கான், இந்தியா குறித்த தனது பந்தம் பற்றி மிக உருக்கமான கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “சிலர் என்னை புரிந்து கொண்டனர். சிலரால் அது முடியவில்லை. எனது கருத்தால் பாதிக்கப்பட்டவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படி தான் நடந்து கொண்டு இருப்பேன். ‘நாட்டை விட்டு வெளியேறுவேன்’ என்று நான் கூறியதாக பலர் கூறினார்கள்.”

#TamilSchoolmychoice

“ஆனால் நான் அப்படி கூறவே இல்லை. நான் இந்தியாவில் தான் பிறந்தேன். இங்கு தான் மரணிப்பேன். நாட்டை விட்டு நானோ? அல்லது எனது மனைவியோ? வெளியேற மாட்டோம். எப்பொழுதெல்லாம் நான் வெளிநாடு செல்கிறனோ, அப்போதெல்லாம் வீட்டை விட்டு பிரிந்த துயரத்தில் மூழ்கிவிடுவேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.