Home One Line P2 விஜய் சேதுபதி- அமீர் கான் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி- அமீர் கான் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு!

938
0
SHARE
Ad

சென்னை: பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழகம் மற்றும் உலகத் தமிழர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய நேர்த்தியான பேச்சுத் திறனாலும் இரசிகர்களிடம் காட்டும் அன்பினாலும் திரைப்பட உலகில் அவருக்கான இடத்தினை தக்க வைத்துள்ளார்.

தற்பொழுது மணிகண்டன் இயக்கத்தில்கடைசி விவசாயிமற்றும் விஜய் சந்தர் இயக்கத்தில்சங்கத் தமிழன்என்ற இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்

இந்திய மொழித் திரைப்படங்கள் பங்குபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா இம்மாதம் 8-ஆம் தேதியிலிருந்து 15-ஆம் தேதி வரையிலும் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதும் 22 மொழிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கு பெற்றுள்ளன. இதில் சிறந்த படமாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும், சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் கிடைத்துள்ளது

#TamilSchoolmychoice

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், “சூப்பர் டீலக்ஸ்படத்தில் நடித்த விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசியிருந்தார். இப்படிப்பட்ட ஒரு கலைஞனுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தாம் நடித்துக் கொண்டிருக்கும்சங்கத் தமிழன்படப்பிடிப்பின் போது அங்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் வந்திருந்தார் எனவும், இருவரும் மனம் விட்டு நீண்ட நேரம் பேசியதில் ,விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூடிய விரைவில் விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.