Home One Line P1 “கல்வி அமைச்சருக்கு வார்த்தைகளில் கவனம் தேவை!”- சார்லஸ் சந்தியாகு

“கல்வி அமைச்சருக்கு வார்த்தைகளில் கவனம் தேவை!”- சார்லஸ் சந்தியாகு

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கிறார் என்பது தொடர்பாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டுள்ளார்.

மகாதீரை ஒருதலைப்பட்ச முடிவுகளுடன் இணைப்பது ஆதாரமற்றது மற்றும் அப்பட்டமான பொய் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தற்காத்துப் பேசியுள்ளார்.

என்னை பொய்யர் என்று அழைப்பது கடுமையான குற்றச்சாட்டு. மஸ்லீ தனது வார்த்தைகளின் கவனம் செலுத்த வேண்டும். மேலும் முக்கியமாக, அவரது வேலையில் கவனம் செலுத்த வேண்டும். நான் கூறியது தவறு என்று அவர் நிரூபிக்க வேண்டும், ஏனெனில் தற்காத்துப் பேசுவது என்பது எளிதான வழி,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் புதிய மலேசியாவை ஏற்படுத்தினோம். இது சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கம் என்ற அடிப்படையில் மக்களால் வாக்களிக்கப்பட்டது. எனவே மக்களின் குரல்கள் கொள்கை முடிவுகளில் பிரதிபலிக்கப்படுவது பொருத்தமானது.” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய கல்வி முறை குழப்பத்தில் உள்ளது. அதை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல அதிக வேலை செய்ய வேண்டும். 13 மாதங்கள் ஆகிவிட்டன.” என்று சார்லஸ் சுட்டிக் காட்டினார்.

நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய மொழி பாடத்திட்டத்தில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டதைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணியின் முடிவெடுக்கும் செயல்முறையை சார்லஸ் விமர்சித்ததை அடுத்து, மகாதீரை மஸ்லீ தற்காத்துப் பேசியிருந்தார்.