Home Featured நாடு “பிரதமருக்கு வந்த 2.6 பில்லியன் 1எம்டிபியின் பணமல்ல என்றால் ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர் மீண்டும்...

“பிரதமருக்கு வந்த 2.6 பில்லியன் 1எம்டிபியின் பணமல்ல என்றால் ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர் மீண்டும் சாடல்!

504
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனக்குக் கிடைத்த 2.6 பில்லியன் நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதைத் தான் வெளியிட முடியாது என பிரதமர் கூறியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் “அந்த நன்கொடைப் பணம் 1எம்டிபியின் பணமல்ல என்பதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dr Mahathirமத்திய கிழக்கு நாடு ஒன்றிலிருந்து வந்த நன்கொடைதான் அந்த சர்ச்சைக்குரிய 2.6 பில்லியன் எனக் கூறியுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதற்கான ஆதாரங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.

இந்தப் பணம் 1எம்டிபி நிறுவனத்தின் பணமல்ல என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் எவ்வாறு நிர்ணயித்தது என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றார்கள் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இது குறித்து போலீஸ் புகார் செய்பவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களின் வழக்கறிஞர்களும் கைது செய்யப்படுகின்றார்கள்” என்றும் மகாதீர் சாடியுள்ளார்.

பத்து கவான் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோரின் கைது குறித்துத்தான் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் மகாதீர் இந்த விவகாரங்களை எழுப்பியுள்ளார்.

“ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு ஆதாரங்கள் தேவை. பிரதமரின் வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை 1 எம்டிபியின் பணமல்ல என்பதற்கான ஆதாரங்கள் தேவை” என்றும் கூறியுள்ள மகாதீர் “நீங்கள் கூறுவதற்கு ஆதாரங்கள் வழங்குங்கள்” என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தை நோக்கி கேள்வி தொடுத்துள்ளார்.

இதுபோன்ற விவகாரங்களில் வெளி கணக்காய்வாளர்கள் கணக்குகளைத் தணிக்கை செய்வது வழக்கம் என்றும் 1எம்டிபி நடவடிக்கைகளையும், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தை மூடி மறைக்கவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன என்றும் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.