Home Featured நாடு “எனது வலைப்பக்கத்தில் எழுதுவேன் காத்திருங்கள்” – புன்னகையுடன் மகாதீர் பதில்!

“எனது வலைப்பக்கத்தில் எழுதுவேன் காத்திருங்கள்” – புன்னகையுடன் மகாதீர் பதில்!

582
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறித்தும், அவரது தலைமைத்துவம் குறித்தும் கடுமையாக வசை பாடி வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவை குறித்து இன்னும் தனது கருத்துக்களை வெளியிடவில்லை.

இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டதற்கு, “நான் சிரிக்கிறேன்” என்று சூட்சமமாகப் பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிலை வைத்து அவர் அம்னோ பொதுபேரவையைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறாரா? அல்லது மேலும் நஜிப்புக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கவுள்ளாரா? என்பது தெரியாமல் செய்தியாளர்கள் குழம்பி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், விரைவில் தனது வலைத்தளத்தில் தனது கருத்தை வெளியிடுவேன் என மகாதீர் உறுதியளித்துள்ளார்.