Home Featured வணிகம் சிறந்த மலிவு விலை விமானம் சேவை விருது: 3-வது முறையாக ஏர் ஆசியா வென்றது!

சிறந்த மலிவு விலை விமானம் சேவை விருது: 3-வது முறையாக ஏர் ஆசியா வென்றது!

635
0
SHARE
Ad

AirAsia--1024x681கோலாலம்பூர் – மலிவு விலையில் விமானங்களை இயக்கும் சிறந்த நிறுவனமாக அனைத்துலக அளவில் மீண்டும் விருது பெற்றுள்ளது ஏர் ஆசியா. மொராக்கோவில் நடைபெற்ற 2015-ம் ஆண்டிற்கான அனைத்துலக பயண விருதளிப்பு விழாவில் (World Travel Awards ) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏர் ஆசியாவிற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏர் ஆசியாவின் இணைய தளத்திற்கும், செயலிக்கும் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறுகையில்,File photo of AirAsia Group CEO Fernandes smiling during a news conference in Mumbai “எங்கள் சேவையை வலுப்படுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கான சான்று தான் இந்த விருதுகள். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம். எங்களின் இந்த சேவை அடுத்து வரும் 2016-ம் ஆண்டிலும் தொடர்வதற்கு எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அனைத்துலக பயண விருதுகள் என்பது பயணத்துறையில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.