Home Featured உலகம் நேபாள அதிபர் மீது இந்திய வம்சாவளியினர் தாக்குதல்!

நேபாள அதிபர் மீது இந்திய வம்சாவளியினர் தாக்குதல்!

705
0
SHARE
Ad

Bidhya-Bhandariகாத்மாண்டு – நேபாளத்தின் முதல் பெண் அதிபரான பித்தியா தேவி பண்டாரியின் வாகனத்தின் மீது இந்திய வம்சாவளியினரான மாதேசிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த தாக்குதலில் பித்தியா எவ்வித காயமும் இன்றி தப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசிகள் எனப்படும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர், அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் சாசனத்தால், தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் வன்முறையாகி வரும் இந்த போராட்டம், தற்போது அந்நாட்டு அதிபர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

petrol-bombமாதேசிகளின் கிளர்ச்சியின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நேபாள ஊடகங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.