Home Featured இந்தியா மும்பையில் விமான சுழல் சக்கரத்தால் உறிஞ்சப்பட்ட பணியாளர் மரணம்!

மும்பையில் விமான சுழல் சக்கரத்தால் உறிஞ்சப்பட்ட பணியாளர் மரணம்!

890
0
SHARE
Ad

மும்பை: ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, சுழலும் அதன் இறக்கை இயந்திர சக்கரத்தால் உறிஞ்சி உள்ளே இழுக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் அந்த சம்பவத்தால் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் நடந்தது.

Air India planeஏர் இந்தியா விமானம் ஒன்றின் மாதிரிப் படம்

#TamilSchoolmychoice

ஏஜ 619 (AI 619) என்ற பயணக் குறியீட்டைக் கொண்ட அந்த விமானம் நேற்று மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கி தனது சேவையைத் தொடங்கவிருந்தது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் பின்னோக்கி நகர்ந்தபோது அதன் இயந்திரத்தின் அருகில் ஒரு தொழில்நுட்பப் பணியாளர் நின்று கொண்டிருந்தார். அதைக் கவனிக்காமல், விமானி இயந்திரத்தை முடுக்கி விட சுழலும் இராட்சத சக்கரங்களால் அந்தப் பணியாளர் இயந்திரத்திற்குள் உறிஞ்சப்பட்டார்.

ஏர் இந்தியா விமான நிறுவனமும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. “நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தப்படுகின்றோம். மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.