Home வாழ் நலம் நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையுமாம்!

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையுமாம்!

779
0
SHARE
Ad

stand and workலண்டன்,ஜன.11 –  சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக உடற்பயிற்சி விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.

இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.