Home Featured கலையுலகம் கபாலியுடன் களமிறங்கப்போகும் ஜெட் லீ!

கபாலியுடன் களமிறங்கப்போகும் ஜெட் லீ!

703
0
SHARE
Ad

Rajini (2)சென்னை – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெட்லி நடிப்பதாக தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

மலேசியாவை மையமாக வைத்து இயக்கப்பட்டு வரும் படமான கபாலியில், ரஜினி டானாக நடிக்கிறார். அவருக்கு ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே அதைக் கருத்தில் கொண்டு அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜெட்லியை ஒப்பந்தம் செய்ய அப்படத் தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் ‘எந்திரன் 2’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர், அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

அண்மையத் தமிழ்ப் படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் பிரபல ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைப்பது அதிகரித்து வருகின்றது. கடந்த வாரம் வெளியான ‘பூலோகம்’ திரைப்படம் கூட உதாரணமாகச் சொல்லலாம்.