Home Featured நாடு நிக் அஜீஸ் மகன் நிக் ஓமார் அமனாவில் இணைந்தார்!

நிக் அஜீஸ் மகன் நிக் ஓமார் அமனாவில் இணைந்தார்!

1051
0
SHARE
Ad

Nik-Oma-Nik-Ab-Azizகோலாலம்பூர் – மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட்டின் மகன் நிக் ஓமார் நிக் அஜீஸ், நேற்று பிரிந்து சென்ற பாஸ் தலைவர்களைக் கொண்ட அமனா நெகாரா கட்சியில் இணைந்துள்ளார். அவர் அந்தக் கட்சியின் கிளந்தான் மாநில ஷரியா மன்றத்தின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார்.

நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளந்தான் அமனா தொலைத்தொடர்பு இயக்குநர் நோர்டின் ஹுசைன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

நிக் ஓமாருடன் கிளந்தான் அமனா தலைமைத்துவத்தில் இணையும் இன்னும் பிற தலைவர்களும் அறிவிக்கப்பட்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice