Home நாடு அட்லி சஹாரி, அமானா சார்பில் அமைச்சராகலாம்

அட்லி சஹாரி, அமானா சார்பில் அமைச்சராகலாம்

502
0
SHARE
Ad
அட்லி சஹாரி

புத்ரா ஜெயா : அமானா கட்சியின் சார்பில் அதன் உதவித் தலைவர் அட்லி சஹாரி அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சலாஹூடின் அயூப் வகித்த உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச்சூழல் அமைச்சராக நியமிக்கப்படுவாரா அல்லது வேறு அமைச்சுக்கு நியமிக்கப்படுவாரா என்பது குறித்தும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அட்லி தற்போது துணை தற்காப்பு அமைச்சராக பதவி வகிக்கிறார். மலாக்கா மாநில முதலமைச்சராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்.

52 வயதான அட்லி கடந்த 15-வது பொதுத் தேர்தலில் அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டியில் 890 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

சலாஹூடின் அயூப் காலமானதால் நடத்தப்பட்ட நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அமானா- பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது.