Home Photo News அன்வார், நியூயார்க்கில் உலகத் தலைவர்களைச் சந்தித்தார்

அன்வார், நியூயார்க்கில் உலகத் தலைவர்களைச் சந்தித்தார்

409
0
SHARE
Ad

நியூயார்க் : இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரிசையாக பல அயல் நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனது துணைவியார் வான் அசிசாவுடனும் , மலேசியக் குழுவுடனும் நியூயார்க் வந்திருக்கும் அன்வாரை நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 20) வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயுடன்

அனைத்துலக வாணிப அமைச்சர் தெங்கு சாப்ருல் அசிஸ், உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் அன்வாருடன் நியூயார்க் வந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மலேசியப் பிரதமர் என்ற முறையில் அன்வார் நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரை நிகழ்த்துவார்.

ஈரானிய அதிபர் சைட் இப்ராஹிம் ராய்சி

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, துருக்கியே அதிபர் எர்டோகன், ஈரானிய, ஈராக்கிய அதிபர்கள், தாய்லாந்து பிரதமர் ஆகியோர் அன்வாரைச் சந்தித்த தலைவர்களில் சிலராவர்.