புதுடில்லி : நீண்ட காலமாக இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வந்த மகளிருக்கான 33 விழுக்காடு நாடாளுமன்ற, சட்டமன்ற இட ஒதுக்கீடு சட்டமாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குபிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு நடக்கும் தேர்தலில்தான் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும்.
1996 முதல் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வந்தது.
சில சமயங்களில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இந்த சட்டம் தோல்வியைச் சந்தித்தது.