Home இந்தியா இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!

இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!

185
0
SHARE
Ad
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம்

இந்தியா: ஆளும் பாஜக அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா இந்திய நாடாளுமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த வேளையில், 198 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதாவுக்கு மின்னணு முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்துவது இது முதல் முறையாகும்.

இந்த மசோதா நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இனி சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை ஒரே காலகட்டத்தில் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அரசாங்கம் இந்த சட்டத்தை முன்மொழிந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மூலம் அரசியல் சட்ட அமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதால் 3-இல் இரண்டு 2 பங்கு பெரும்பான்மை ஆதரவு என்பது வேண்டும். 3-இல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால்  இந்த மசோதாவை அமுலாக்க முடியாத நிலை உள்ளது.