Home நாடு மாமன்னராக பொறுப்பேற்கத் தயார் – ஜோகூர் சுல்தான் கோடி காட்டினார்

மாமன்னராக பொறுப்பேற்கத் தயார் – ஜோகூர் சுல்தான் கோடி காட்டினார்

379
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : மலேசிய நாட்டு வழக்கப்படி ஒவ்வொரு  மாநில மலாய் சுல்தானும்  ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரிசைக்கிரமமாக மாமன்னராக பணியாற்றுவது நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான மரபாகும்.

அந்த வகையில் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், அடுத்த மாமன்னராக தகுதி பெறுகிறார். இன்று வெள்ளிக்கிழமை பெர்னாமா தலைவர் டத்தோ வோங் சூன் வாய்யை தன் அரண்மனையில் சந்தித்த போது சுல்தான் ‘இந்த பொறுப்பினை ஏற்க, தான் தயாராக இருப்பதாக’ தெரிவித்தார்.

“இது பதவி உயர்வு அல்ல! மாறாக ஒரு சுமை மிக்க பொறுப்பு! அதனை ஏற்க நான் தயார்!” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் அடுத்த மாமன்னராக பதவி ஏற்க அவர் தயாராக இருக்கிறார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மக்களின் நலனுக்காகவும் நாட்டுக்காகவும் இந்த பொறுப்பை ஏற்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்

நாட்டின் அடுத்த மாமன்னர் யார் என்பதை மலாய் ஆட்சியாளர்கள் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.

நாட்டின் 16 வது  நடப்பு மாமன்னரான  சுல்தான் அப்துல்லா அகமட் ஷாவின் பதவிக்காலம் எதிர்வரும் 23 ஜனவரி 2024-ஆம் நாளுடன் நிறைவு பெறுகிறது.

அவருக்கு அடுத்த மாமன்னராக வருவார் என எதிர்பார்க்கப்படும் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் ஆட்சியாளராக கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.