Home நாடு அமைச்சர் சலாஹூடின் அயூப் காலமானார்

அமைச்சர் சலாஹூடின் அயூப் காலமானார்

626
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் : உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சர் சலாஹூடின் அயூப் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) காலமானார்.

மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் அவரின் நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் தனது 61-வது வயதிலேயே காலமானது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமானா கட்சியின் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்து வந்தார். அவரின் நல்லுடல் அலோர்ஸ்டாரில் இருந்து அவரின் பூர்வீக மாநிலமான ஜோகூருக்கு சிறப்பு விமானத்தில் இன்று இரவு கொண்டு செல்லப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் இந்த வேளையில் சலாஹூடின் அகால மரணமடைந்திருப்பது பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

சலாஹூடின் பூலாய் (ஜோகூர்) நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கடந்த 15-வது பொதுத் தேர்தலில் 33,174 வாக்குகள் பெரும்பான்மையில் அந்தத் தொகுதியை பக்காத்தான் வேட்பாளராக அவர் கைப்பற்றினார்.ஜோகூர் நூசா ஜெயா சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் வெற்றி பெற்றிருந்தார். இதன் காரணமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.