Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023’

ஆஸ்ட்ரோ : ‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023’

585
0
SHARE
Ad

*‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023’ எனும் ஆஸ்ட்ரோவின் திறமையாளர்களுக்கான தேடலின் மெய்நிகர் ஆடிஷன் ஆகஸ்டு 11 வரை திறக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர் – 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள உள்ளூர் திறமையாளர்கள் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023-இன் மெய்நிகர் ஆடிஷனில் (தேர்வில்) இப்போதிலிருந்து ஆகஸ்டு 11, 2023 வரைப் பங்கேற்கலாம். வெற்றியாளர்கள் உள்ளூர் கலைத்துறையில் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராகவோ அல்லது வானொலி அறிவிப்பாளராகவோ தங்கள் தொழில் பயணத்தைத் தொடங்குவதற்கும், 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதற்கும் வாய்ப்பைப் பெறுவர்.

ஆடிஷனில் பங்கேற்கப், போட்டியாளர்கள் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:

• அவர்களின் ஆளுமையை விவரித்தும் ஏன் அவர்கள் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023-இன் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் ஒரு நிமிடக் காணொலியில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம்-இல் பதிவேற்ற வேண்டும்.

#TamilSchoolmychoice

• இன்ஸ்டாகிராம் பதிவில் #UltimateStarSearch2023 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும், பங்கேற்கும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் போட்டிக் காலம் முழுவதும் ‘பொதுவாக’ அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

• www.astroulagam.com.my வழியாகப் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்வதோடு இன்ஸ்டாகிராம் காணொலி இணைப்பையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டப் போட்டியாளர்கள் பின்வரும் நேர்முகத்தேர்வுகளில் ஒன்றில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்:

• 26 & 27 ஆகஸ்டு: அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், மிட் வேலி கண்காட்சி மையம், தி மால், மிட் வேலி சௌத்கி, ஜோகூர் பாரு.

• 9 & 10 செப்டம்பர்: ஆஸ்ட்ரோ, ஆல் ஆசியா பிராட்காஸ்ட் சென்டர், டெக்னாலஜி பார்க் மலேசியா, லெபுராயா பூச்சோங் – சுங்கை பெசி, புக்கிட் ஜலீல், 57000 கோலாலம்பூர்.

• 30 செப்டம்பர் & 1 அக்டோபர்: அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், வெர்வியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் (VTEC), ஆஸ்பென் விஷன் சிட்டி, 1, ஜாலான் வெர்வியா 6, பினாங்கு.

மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்