*ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் ஆஸ்ட்ரோ உலகம் வழங்கும் தமிழ் அமுதம் போட்டி
*தமிழ் பேசும் திறனை வெளிப்படுத்த 9 முதல் 12 வயதுக்குட்பட்ட மலேசியர்களுக்கு இப்போட்டி திறக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் மின்னியல் பொழுதுபோக்குத் தளமான ஆஸ்ட்ரோ உலகம் இணைந்து நடத்தும் ‘தமிழ் அமுதம்’ என்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் சரளமானத் தமிழ் மொழியை வெளிப்படுத்த 9 முதல் 12 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெற்றோரின் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சமர்ப்பிப்புக் காணொலிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.
இளம் மலேசியர்களுக்கான ஈடுபாட்டுத் தளமாக இருப்பதுடன், ‘தமிழ் அமுதம்’, இளம் மலேசியர்களை அவர்களது மொழித்திறனை வெளிப்படுத்தவும், மொழிப் புலமை மற்றும் கலாச்சார விழிப்புணர்வை வளர்க்கவும் ஊக்குவிக்கும்.
பெற்றோர் அல்லது பிள்ளைகளின் பாதுகாவலர்கள் கீழே உள்ளப் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் குழந்தைகளை இப்போட்டியில் பங்கேற்கச் செய்யலாம்:
*மொழி வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றித் தங்களின் குழந்தை எந்தத் தலைப்பிலும் தமிழில் 60-வினாடிகளுக்குள் பேசும் காணொலியைப் பதிவு செய்ய வேண்டும்.
*பதிவில் #UlagamTamilAmutham என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அக்காணொலியைப் பெற்றோர் அல்லது பிள்ளைகளின் பாதுகாவலர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்ற வேண்டும்.
*பங்கேற்கும் சமூக ஊடகக் கணக்குகள் போட்டிக் காலக்கட்டத்தின் போது பொதுவில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்களும் ஒரு நுழைவுப் படிவத்தை இங்கே சமர்ப்பிக்க வேண்டும்.
மேல் விவரங்களுக்கு, www. astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.