Home நாடு கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் : பிகேஆர்-பாஸ் மோதல்

கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் : பிகேஆர்-பாஸ் மோதல்

437
0
SHARE
Ad

கோலதிரெங்கானு :  நடைபெறவிருக்கும் கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது. பிகேஆர் கட்சியின் திரெங்கானு மாநில முன்னாள் தலைவர் அசான் இஸ்மாயில் பிகேஆர் வேட்பாளராக அங்கு போட்டியிடுவார் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களோடு கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29-ஆம் தேதியும், போட்டியிருந்தால் வாக்களிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் நடைபெறும்.

அகமட் ஹம்சாட் ஹாஷிம்

கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் அகமட் அம்சாட் திரெங்கானு மாநிலத்திலுள்ள கோல திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதியில் 40,907 வாக்குகள் பெரும்பான்மையில் தன்னை எதிர்த்து நின்ற 3 வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

ஆனால் அவரின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பின் வழி அறிவிக்கப்பட்டது. ஜூன் 27-ஆம் தேதி திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் 15வது பொதுத் தேர்தலில்  பாஸ் கட்சியின் அகமட் ஹம்சாட் ஹாஷிம் பெற்ற கோலதிரெங்கானுவின் வெற்றியை ரத்து செய்தது.

தேர்தலில் ஊழல் நடந்திருப்பதால் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. அகமட் ஹம்சாட் கோலதிரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை என முடிவெடுத்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.