ஆனால் அவரின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பின் வழி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கோல திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதியின் காலியிடம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அதன் செயலாளர் இக்மல்ருதீன் இஷாக் தெரிவித்தார்.
ஜூன் 27-ஆம் தேதி தெரெங்கானு தேர்தல் நீதிமன்றம் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் அகமட் அம்சாட் ஹாஷிம் குவாலா தெரெங்கானுவின் வெற்றியை ரத்து செய்தது.
தேர்தலில் ஊழல் நடந்திருப்பதால் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அகமட் அம்சாட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோலதிரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் மனுவின் முடிவுக்கு எதிராக பாஸ் மேல்முறையீடு செய்யாது, மாறாக, இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.