Home நாடு இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு

இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு

548
0
SHARE
Ad

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை , அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்காக இரண்டு மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக மாநாட்டுக்காக 1 மில்லியன் ரிங்கிட் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் பலத்த கரவொலிகளுக்கிடையில் அன்வார் தனதுரையில் தெரிவித்தார்.

மலேசியாவில் ஒரு மாணவன் பன்மொழித் திறமைகளோடு இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது எனக் கருத்துரைத்த அன்வார், மலாய் மொழியை நாட்டின் தேசிய மொழியாக அங்கீகரிக்கும் அதே வேளையில் தமிழ், மாண்டரின், அரபி போன்ற மற்ற மொழிகளின் மேம்பாட்டுக்கும் தனது தலைமைத்துவம் ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அந்த அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய ஆய்வியல் துறை மேலும் தன் நடவடிக்கைகளை விரிவாக்க 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அன்வார் தனதுரையில் அறிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவரான டான்ஸ்ரீ டாக்டர் த.மாரிமுத்து தன் பழைய நண்பர் எனக் குறிப்பிட்ட அன்வார், திருக்குறள் குறித்த விவரங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.