கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உரையாற்றினார்.
மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து வைத்த மாநாட்டுக்காக 1 மில்லியன் ரிங்கிட் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.
தமிழ் நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.