Home நாடு புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி : ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் போட்டி

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி : ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் போட்டி

419
0
SHARE
Ad
ராஜிவ் ரிஷ்யாகரன்

பெட்டாலிங் ஜெயா : பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று புக்கிட் காசிங். இந்தத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் அங்கு ஜசெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜசெக அறிவித்த சிலாங்கூர் மாநிலத்துக்கான சட்டமன்ற வேட்பாளர்களின் பட்டியலில் ரிஷ்யாகரனும் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்தத் தொகுதியில் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ போட்டியிடுவார், வெற்றி பெற்றால் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார் என்ற ஆரூடங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் ரிஷ்யாகரன் 29,366 வாக்குகள் பெற்று இங்கு 25,835 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். கெராக்கான் வேட்பாளர் சாய் கோ திங் என்பவரைத் தோற்கடித்தார். அவருக்கு 3,531 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மற்றொரு சுயேட்சை வேட்பாளருக்கு 890 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.