Home இந்தியா தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பிரணாப் முதலிடம்!

தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பிரணாப் முதலிடம்!

546
0
SHARE
Ad

piranapபுது டில்லி, மார்ச்.14- இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட கசாப், அப்சல்குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்ததால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு (படம்)  தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி புனே ஏர்வாடா சிறையில் தூக்கிலிடபட்டான்.

இதேபோல் டெல்லி பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல்குரு கடந்த மாதம் பிப்ரவரி 9-ந்தேதி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

மும்பையில் தாக்குதல் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்குப்பின் கசாப் தூக்கிலிடப்பட்டான். அதேபோல் டெல்லியில் பாராளுமன்றம் தாக்குதல் நடந்த 12 ஆண்டுகள் கழித்து அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் அப்சல்குருவின் கருணை மனு நீண்டகாலமாக ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்தது.

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் 5 மாதத்தில் கசாப் கருணை மனுவையும், 6-வது மாதத்தில் அப்சல் குருவின் கருணை மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனால் முகர்ஜிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பட்டியலில் மிக உயர்ந்த முக்கிய பிரமுகராக பிரணாப் முகர்ஜி இடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் தீவிரவாதிகள் மிரட்டல் பட்டியலில் உள்ளார்.

இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.