Home Featured உலகம் ரூபர்ட் மர்டோக் – அமெரிக்க மாடல் அழகி ஜெரி ஹால் திருமணம்!

ரூபர்ட் மர்டோக் – அமெரிக்க மாடல் அழகி ஜெரி ஹால் திருமணம்!

664
0
SHARE
Ad

இலண்டன் – அனைத்துலக அளவில் தகவல் ஊடகத் துறை கோடீஸ்வரரான 84 வயதான ரூபர்ட் மர்டோக், 59 வயதான அமெரிக்க மாடல் அழகி ஜெரி ஹால் என்பவரைத் திருமணம் புரியவிருப்பதாக டைம்ஸ் பத்திரிக்கை அறிவித்துள்ளது.

Rupert Murdoch and Jerry Hall to marryஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கோல்டன் குளோப் திரைப்பட விருதுகள் விழாவுக்கு ஜெரி ஹால்லுடன் வருகை தந்த ரூபர்ட் மர்டோக்…

டைம்ஸ் பத்திரிக்கையின் உரிமையாளரும் ரூபர்ட் மர்டோக் ஆவார். ஆஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்டோக் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

#TamilSchoolmychoice

டைம்ஸ் பத்திரிக்கையின் இன்றைய செவ்வாய்க்கிழமை பதிப்பில் மர்டோக்-ஜெரி ஹால் திருமண செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக் குழுவைச் சேர்ந்த மிக் ஜேக்கர் என்ற பாடகரை ஏற்கனவே திருமணம் செய்திருந்த ஜெரி ஹால்லுக்கு அந்தக் கணவர் மூலமாக ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.

Rupert Murdoc- ex wife-wendi-deng-மர்டோக் தன் முன்னாள் மனைவி வெண்டி டெங்குடன்….

மர்டோக் ஏற்கனவே 3 முறை திருமணம் புரிந்தவராவார். ஆகக் கடைசியாக ஹாங்காங்கைச் சேர்ந்த அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த சீனப் பெண்மணியான வெண்டி டெங் என்பவரைத் திருமணம் புரிந்திருந்தார்.

அவருடன் 14 ஆண்டுகள் தொடர்ந்த மர்டோக்கின் திருமண வாழ்க்கை 2013இல் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். விவாகரத்து தொடர்பில் தனது சொத்தில் பல கோடிக்கணக்கான மதிப்பிலான செல்வத்தை மர்டோக் அப்போதைய மனைவி வெண்டியிடம் இழப்பீடாகத் தர நேர்ந்தது.

நியூஸ் கோர்ப், ஃபோக்ஸ் நிறுவனம் போன்ற பல தகவல் ஊடக நிறுவனங்களின் பங்குதாரரான மர்டோக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் முதல் ஜெரி ஹால்லுடன் பொது இடங்களுக்கு வரத் தொடங்கினார்.