Home உலகம் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் ரூபர்ட் முர்டோக்

மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் ரூபர்ட் முர்டோக்

596
0
SHARE
Ad

நியூயார்க், ஜூன் 15- பல்வேறு ஊடகங்களின் தலைவராக உள்ள ரூபர்ட் முர்டோக்  (வயது 82) தன் மூன்றாவது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

rupert_murdoch_ap_605பிரபலமான, “ஸ்டார் டிவி, ஸ்கை டிவி, பாக்ஸ் நியூஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ உள்ளிட்ட ஏராளமான ஊடகங்களின் தலைவராக இருப்பவர் ரூபர்ட் முர்டோக் (படம்).

இவர் கடந்த 67ல் முதல் மனைவி பேட்ரீசியாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு புருடன்ஸ் என்ற மகள் உள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 98ல் இரண்டாவது மனைவி அன்னாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தன்னை விட 38 வயது இளையவரான சீன பெண் வென்டி டெங்  (வயது 44)  கடந்த 97ல் ஹாங்காங்கில் சந்தித்தார்.

இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த பின் வென்டியை மணந்தார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த, 2006லிருந்து இவர்களுக்குள் பூசல் துவங்கி விட்டது. இனிமேலும் வென்டியுடன் சேர்ந்து வாழ முடியாது என நியூயார்க்கில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் , விவாகரத்து கோரி முர்டோக் மனு செய்துள்ளார்.

பிரபல, “ஸ்டார் டிவி’ யின் மாஜி ஊழியரான வென்டி தற்போது முர்டோக்கின் எந்த ஊடகத்திலும், பங்குதாரராக இல்லை.

இருப்பினும்  இவர் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். முர்டோக்கின் நிறுவனங்களில் வென்டியின் குழந்தைகளுக்கு பங்கு உண்டு.