Home Featured உலகம் இந்தோனேசியாவின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் – காவல்துறை எச்சரிக்கை!

இந்தோனேசியாவின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் – காவல்துறை எச்சரிக்கை!

540
0
SHARE
Ad

jakarta-attacksஜகார்த்தா – கடந்த வியாழக் கிழமை ஜகார்த்தாவில் ஐஎஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தினர் இந்தோனேசியாவின் மற்ற நகரங்களுக்கும் குறி வைத்துள்ளதாக காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்காக 12 ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள் இந்தோனேசியாவில் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ஆண்டன் சார்லியன் கூறுகையில், “காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வெளிநாட்டவர்களின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள் தற்போது ஐஎஸ் இயக்கத்தினரால் குறி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், சுற்றுலாத் தளங்கள் அனைத்தின் மீதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.