Home Featured தமிழ் நாடு யானைக்கும் ஜெயாவிற்கும் உள்ள ஒற்றுமை – இளங்கோவன் மட்டகரமான பேச்சு!

யானைக்கும் ஜெயாவிற்கும் உள்ள ஒற்றுமை – இளங்கோவன் மட்டகரமான பேச்சு!

497
0
SHARE
Ad

evks-elangovanவேலூர் – வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து மிக மோசமான முறையில் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், “ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துமே பணம் தான். பணம் கொடுக்காவிட்டால் ஒரு வேலையும் நடக்காது. சேலம் என்றாலே மாம்பழம் தான். அப்படிப்பட்ட மாம்பழத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது விவசாயிகள் மகிழ்ந்தனர். ஆனால் தற்போதோ எங்கும் சாராயம் தான் இருக்கிறது. பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்னை சந்தித்து, துணை வேந்தர் எங்களை எல்லாம் நீக்கிவிட்டு புதியவர்களை வேலைக்கு எடுக்கிறார். அவர்களிடம் 6 முதல் 7 லட்சம் வரை வாங்குகிறார் என்றார்கள்.”

“தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தராக வேண்டும் என்றால் ஜெயலலிதாவுக்கு 12 கோடி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தவர்கள் அதை திரும்ப சம்பாதிக்கத் தானே பார்ப்பார்கள். காமராஜர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி சிறைக்கு சென்றார். ஆனால் அதிமுகவினரோ எங்கம்மாவும் தான் சிறைக்கு சென்றார்கள் என்கின்றனர். இந்த அம்மா நாட்டை கொள்ளையடித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறைக்கு சென்றவர்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ஜெயலலிதா, நேரில் சென்று ஆறுதல் கூறாதது பற்றி விமர்சித்த அவர், யானைகளுக்காக நடத்தப்படும் முகாம்கள் குறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் யானைகளுக்கு முகாம்கள் நடத்துகிறார்கள். அப்படி என்ன யானைகள் மீது பாசம். உங்களுக்கும் யானைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை உருவ ஒற்றுமை தான்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், “ஒரு பெரியவரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு அவரை வெளியேற்றினீர்கள். அந்த அம்மாவுடன் யாரும் எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றார் அந்த பெரியவர். அவர் வேறு யாரும் இல்லை எம்.ஜி.ஆர் தான்” என்றும் கூறியுள்ளது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.