Home Featured நாடு ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?

ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?

580
0
SHARE
Ad

lim lipகோலாலம்பூர் – கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அதே சட்டத்தின் கீழ், 2.6 பில்லியன் நன்கொடையை கணக்குக் காட்டாத பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 8, 2014 தேதியிட்ட உறுதிமொழி அறிக்கையில் கமிஷனாகப் பெறப்பட்ட 961,500 ரிங்கிட் லாபத்தை குறிப்பிடவில்லை என்பதால், சட்டப்பிரிவு 49 (1)-ன் படி, அரசாங்க வழக்கறிஞரின் அறிக்கையை மீறியதாக கு சின் மீது நேற்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதைச் சுட்டிக் காட்டியுள்ள லிம் லிப் எங், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை பெறப்பட்ட விவகாரத்தில், 2013 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நஜிப், ஊழல்தடுப்பு ஆணையத்திடம் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அந்த நன்கொடையைக் காட்டியுள்ளாரா? அல்லது அரசாங்க வழக்கறிஞர் அந்தத் தொகையை அறிவிக்கும் அறிக்கையை அனுப்ப நேரம் எடுத்துக் கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி, நஜிப் எம்ஏசிசி-யிடம் அந்தக் கணக்கை காட்டியிருந்தால் பின்னர் ஏன் இன்று வரை விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்? என்றும் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.