Home Featured நாடு பத்துமலை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்ட 3 பக்தர்கள் வாகனம் மோதி பலி! 3 பேர்...

பத்துமலை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்ட 3 பக்தர்கள் வாகனம் மோதி பலி! 3 பேர் காயம்!

1525
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீலாய் நகரிலிருந்து, பத்துமலை நோக்கி நடைப் பயணமாக வந்து கொண்டிருந்த பக்தர்கள் குழு மீது வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் சிரம்பான் நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் சுங்கை பீசி அருகே நிகழ்ந்தது.

Thaipusam-2016-accident-1இந்த விபத்துக்குக் காரணமான வாகனம் கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ ரக (BMW) கார் என்றும் அதன் எண்: PMH 718 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிலர் ஒரு குழுவாக நெடுஞ்சாலையின் ஓரத்தில், அவசரப் பாதைக்கான பிரிவில் நடந்து கொண்டிருந்த போது அந்த கார் அவர்களை மோதி விட்டு, நிற்காமல், விரைந்து சென்று விட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் பத்துமலை நோக்கி நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

Thaipusam-2016-accident-காயமடைந்தவர்கள் பின்னர் செராஸ் தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு (யுகேஎம்) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மரணமடைந்தவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:

  1. சரவணன் கிருஷ்ணன் (45 வயது)
  2. கண்ணன் சின்னக் கண்ணு (51 வயது)
  3. பாப்பா சின்னா (பெண்மணி) -(53 வயது)

மற்றவர்களின் நிலைமை இதுவரை அறிவிக்கப்படவில்லை.