Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்!

835
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது ஏற்படுத்தப்படும் சாலைத் தடுப்புகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) , காவல் துறைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஜேபிஜே அதற்கு விண்ணப்பித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், சரியான ஓட்டுநர் உரிமம் அல்லது சாலை வரி இல்லாத ஓட்டுநர்கள் காவல் துறை நடவடிக்கையிலிருந்து விலக்கப்பட்டனர்.

இருப்பினும், அவர்கள் சரியான காப்பீட்டுக் ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.