இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாவான தைப்பூசம் நாளை, முருகன் வழிபாட்டுத் தளங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கிய தளமான பழனியில், நாளை தைப்பூச விழா மிகச் கொண்டாடப்பட இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக்கு வருகை புரிந்துள்ளனர்.
பழனியிலும் ஏறக்குறைய 30,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பழனி மலை முழுவதும் ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக காவல்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.