Home Featured வணிகம் ‘கோல்டன் குளோப் டைகர்ஸ் 2016’ விருதை வென்றது ஆஸ்ட்ரோ!

‘கோல்டன் குளோப் டைகர்ஸ் 2016’ விருதை வென்றது ஆஸ்ட்ரோ!

676
0
SHARE
Ad

Astro_mainகோலாலம்பூர் – 2016-ம் ஆண்டு தைப்பூச நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்ட்ரோ நிறுவனம், அதே தைப்பூச நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக, மற்றொரு அனைத்துலக அமைப்பின் மூலம் ‘த கோல்டன் குளோப் டைகர்ஸ்’ என்ற விருதையும் வென்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, திங்கட்கிழமை கோலாலாம்பூரில் நடைபெற்ற விருது விழாவில், உலக வர்த்தகக் குறியீட்டு காங்கிரஸ் (World Brand Congress) அமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கியதற்காக ஆஸ்ட்ரோவிற்கு இந்த விருதை வழங்கியது.

Astro‘திருமுருகாற்றுப்படை’ என்ற பெயரில் தைப்பூச நிகழ்ச்சியை சிறந்த முறையில் பிரச்சாரம் செய்ததற்காக, (Marketing Campaign of the Year Award, Best Digital and Social Media Marketing Campaign Award) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்ட்ரோவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Mugilanமேலும், ஆஸ்ட்ரோ நியூ மீடியா பிரிவின் உதவி துணைத் தலைவர் முகிலன் சிதம்பரத்திற்கு, “மலேசியாவின் மிகவும் செல்வாக்குமிக்க டிஜிட்டல் வர்த்தகப் பிரிவுத் தலைவர் – Most Influential Digital Marketing Leader in Malaysia Award” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.