Home Featured நாடு “பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் நஜிப், என்னை தண்டித்தது ஏன்?” – மொகிதின் கேள்வி!

“பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் நஜிப், என்னை தண்டித்தது ஏன்?” – மொகிதின் கேள்வி!

641
0
SHARE
Ad

muhyiddin yassinகோலாலம்பூர் – கடந்த வாரம் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) வெளியிட்ட அறிக்கையில் கூறிய குறைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதே குறைகளைச் சுட்டிக்காட்டிய தன்னை தண்டித்தது ஏன்? என்று முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“1எம்டிபி பற்றிய என்னுடைய பார்வையை, பிஏசி அறிக்கையும் உறுதிப்படுத்திவிட்டது. பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ள நஜிப்பும் தயாராகிவிட்டார். ஆனால் அமைச்சரவையில் அதை நான் சுட்டிக் காட்டி குரல் கொடுத்த போது துரதிருஷ்டவசமாக என்னை அவர் தண்டித்துவிட்டார்” என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice