Home Featured கலையுலகம் இந்தியாவில் ‘தி ஜங்கிள் புக்’ படம் 60 கோடி வசூலித்து சாதனை!

இந்தியாவில் ‘தி ஜங்கிள் புக்’ படம் 60 கோடி வசூலித்து சாதனை!

714
0
SHARE
Ad

disney-s-the-jungle-book-finally-baloமும்பை – ‘தி ஜங்கிள் புக்’ படம் வெளியான முதல்நாளில் சுமார்​ ​10​ ​கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படம்,உலகம் முழுவதும் வரும் 16-ஆம் தேதி தான் வெளியாக இருக்கிறது.

ஆனால் இந்திய காடுகளில் கதை நடப்பதாலும் படத்தில் மோக்லி என்ற சிறுவன் நீல்சேத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும்,​ ஒரு ​ வாரத்துக்கு முன்னதாகவே இந்தியா-மலேசியாவில் இப்படத்தை வெளியீட்டனர் படக்குழு.

ஒரு காட்டுக்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை, விலங்குகள் எடுத்து வளர்க்கின்றன. அவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் அவனைக் காப்பாற்றுவது தான் படம்.

#TamilSchoolmychoice

ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்திருப்பதால்,வெளியான முதல் நாளில் 10 கோடியை வசூலித்துள்ளது. ஒரு நேரடி இந்தியப் படம் கூட சாதிக்காத சாதனை இது.

தமிழ், ஆங்கிலம், இந்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் அடுத்தடுத்த மூன்று தினங்களில் ரூ 60 கோடிகளைக் குவித்துள்ளது. இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என்று படக்குழுவினர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.