Home Featured கலையுலகம் இந்தியாவில் ‘தி ஜங்கிள் புக்’ படம் 184 கோடி வசூலித்து சாதனை!

இந்தியாவில் ‘தி ஜங்கிள் புக்’ படம் 184 கோடி வசூலித்து சாதனை!

860
0
SHARE
Ad

the jungle bookசென்னை – ஷாரூக்கான், சல்மான்கான் படங்களின் வசூல் சாதனைகளை ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் முறியடித்திருக்கிறது. இந்திய வம்சாவளிசிறுவனான நீல் சேதியின் நடிப்பில் கடந்த 6-ஆம் தேதி வெளியான ‘தி ஜங்கிள் புக்’ படம் இதுவரை 184 கோடிகளை இந்தியாவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் ஷாரூக்கானின் ‘தில்வாலே’ மற்றும் சல்மான்கானின் ‘பாடிகார்டு’ படங்களின் வசூலை ‘தி ஜங்கிள் புக்’ முறியடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 4-ஆவது வாரத்தில் இப்படத்தின் வசூல் 200 கோடிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 10-ஆவது இடத்தையும் இப்படம் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

நேர்மறையான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் படத்திற்கு குவிந்த ஆதரவு, ரசிகர்களின் பாராட்டு போன்றவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என சினிமா நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் அக்ஷய்குமாரின் ‘ஏர்லிப்ட்’ வசூல் சாதனையை ‘ஜங்கிள் புக்’ சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.