Home Featured தமிழ் நாடு அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது; அந்த மையமே அம்மா தான் – போட்டுத் தாக்கும் பழ.கருப்பையா!

அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது; அந்த மையமே அம்மா தான் – போட்டுத் தாக்கும் பழ.கருப்பையா!

639
0
SHARE
Ad

pazha-karuசென்னை – அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள முன்னாள் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் சர்ச்சையான அரசியல் விவாதங்களுக்கு பெயர் போனவர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பழ.கருப்பையாவிடன் தொகுப்பாளர், அதிமுகவில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல் பற்றி கேட்க,  பழ.கருப்பையா பொங்கிவிட்டார். “அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது. இது திமுகவைக் காட்டிலும் மிக அதிகம். அம்மாவின் (ஜெயலலிதா) மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது. ஆனால் அது தனிப்பட்ட அபிப்ராயம். அதிமுகவில் மையப்படுத்தப்பட்ட ஊழலின் மொத்த உருவம் அம்மா தான்” என்று அவர் ஒரேஅடியாக போட்டுத்தாக்கினார்.

இது ஒருபுறம் இருக்க, தொகுப்பாளர், பழ.கருப்பையா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விகள் எழுப்ப, அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்து நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறினார்.