Home Featured கலையுலகம் இன்று ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா!

இன்று ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா!

592
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – உலகம் முழுவதுமுள்ள சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெறுகின்றது.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நேரப்படி ஆஸ்கார் விருதளிப்பு விழா நடைபெறுகின்றது.

ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் அந்தத் தகவல்கள் செல்லியலில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

#TamilSchoolmychoice

Preparations - 88th Academy Awards

ஆஸ்கார் விருதளிப்புக்காக வருகை தரும் சினிமா நட்சத்திரங்களை வரவேற்க விரிக்கப்படும் சிவப்புக் கம்பள ஏற்பாடுகள்ஆஸ்கார் விருதளிப்பு நடைபெறும் மண்டபத்தின் முன்னால் மும்முரமாக நடைபெறுகின்றன.

Oscar - Leonardo DiCaprioபல பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் படம் “தெ ரெவெணென்ட்” (The Revenant). அந்தப் படம் இலண்டனில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்த லியோனார்டோ டி காப்பிரோ வருகை தந்தபோது எடுத்த படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை லியோர்டானோ பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Preparations ahead of the 2016 Academy Awards in Los Angeles

ஆஸ்கார் விருதளிப்பு நடைபெறும் மண்டபத்தின் முன்னால் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் லியோர்னாடோ டி காப்பிரோவின் பெயரை பதாகையாக வைத்திருக்கும் அவரது இரசிகர்கள்…

-செல்லியல் தொகுப்பு