Home Featured நாடு “ஹாடி அவாங் மார்ச் 27 கூட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை” – சைட் இப்ராகிம் பதிலடி!

“ஹாடி அவாங் மார்ச் 27 கூட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை” – சைட் இப்ராகிம் பதிலடி!

700
0
SHARE
Ad

Zaid-Ibrahim-Sliderகோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நஜிப்பு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அழைக்கப்படவில்லை என்றும் அவரது பெயர் அழைக்கப்படும் பிரமுகர்கள் பட்டியலிலேயே இல்லை என்றும் அந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர் முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார்.

“அவரது பெயர் அழைக்கப்படுபவர்கள் பட்டியலில் இல்லை என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன். எனவே, அவர் வரவில்லை எனக் கூறுவதில் ஆச்சரியமில்லை” என்றும் சைட் இப்ராகிம் கூறினார்.

மார்ச் 27 கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என ஹாடி அவாங் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் சைட் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.