Home நாடு ஹாடி அவாங், மாராங் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

ஹாடி அவாங், மாராங் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

467
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் மாராங் (திரெங்கானு) நாடாளுமன்றத் தேர்தலில் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றி செல்லும் என கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஹாடி அவாங் தொடர்ந்து மாராங் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்.

அவரின் வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்ட தேசிய முன்னணி வேட்பாளர் ஜாஸ்மிரா ஓத்மான் நாடாளுமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

#TamilSchoolmychoice

கூட்டரசு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று புதன்கிழமை ஹாடி அவாங்கின் வெற்றியை உறுதி செய்யும் அந்தத் தீர்ப்பை வழங்கியது.