Home Featured உலகம் சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் 39 பேர் பலி!

சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் 39 பேர் பலி!

744
0
SHARE
Ad

china-coal-mine-fireஷான்சி – சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கு மகாணமான ஷான்சியில் உள்ளது டேடாங் என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் நேற்று இரவு 129 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில், சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த 39 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

China-coal-mine-accidentசீனாவில் நீண்ட காலமாக இது போன்ற நிலக்கரி சுரங்கங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது நடைபெற்று வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சில நடவடிக்கைகளால் தற்போது விபத்து எண்ணிக்கை குறைந்து வருகிறது.