கோலாலம்பூர் – அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் (Astro On Demand) சேவை வாயிலாக உடனுக்குடன் கண்டு களித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு, மேலும் சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில், அதனை விரிவுபடுத்தியுள்ளது அஸ்ட்ரோ நிறுவனம்.
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சேவையை தற்போது 350,000 வாடிக்கையாளர்களுக்கும் மேல் பயன்படுத்தி வருவதாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்ட்ரோ அறிவித்தது.
“எங்களது வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள ஆன் டிமாண்ட் சேவை (On Demand), அவர்களுக்கு என்ன (நிகழ்ச்சிகள்) தேவை, எப்போது தேவை மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது” என்று அஸ்ட்ரோ உள்ளடக்கக் குழுவின் துணைத்தலைவர் ஆக்னெஸ் ரோசாரியோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், பெரும்பாலான வெளிநாட்டு நிகழ்ச்சிகள் அந்தந்த நாடுகளில் வெளியிடப்படும் அதே நேரத்தில், எங்களது வாடிக்கையாளர்களையும் சென்றடைகின்றது என்று குறிப்பிட்ட ஆக்னெஸ், அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கூறலாம் என்று தெரிவித்தார்.
“தற்போது ஆன் டிமாண்ட் சேவையின் ஏர்டைம் (airtime) 11,000 மணி நேரங்களைத் தாண்டிவிட்டது. அமெரிக்கா அல்லது ஐரோப்பா ஆகிய நாடுகளில் வெளியாகும் பல புதிய நிகழ்ச்சிகளை அதே நேரத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கும் ஆன் டிமாண்ட் மூலமாகக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று ஆக்னெஸ் தெரிவித்தார்.
அன்றைய தினமே கிடைக்கும் பிரத்யேக நிகழ்ச்சிகள்
அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சிகளை அங்கு வெளியாகும் அதே நாளில், அதே நேரத்தில் அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவையின் வாயிலாக மலேசிய ரசிகர்களும் கண்டு களிக்கலாம்.
உதாரணமாக, இம்மாதம், Game of Thrones Season 6 (ஏப்ரல் 25, 9 மணி), Silicon Valley Season 3 (ஏப்ரல் 25, 10 மணி), VEEP Season 5 (ஏப்ரல் 25, 10.30 மணி), Vinyl Season 1 (தற்போதைய ஒளிபரப்பில்), Empire Season 2 (தற்போதைய ஒளிபரப்பில்), The Catch Season 2 (தற்போதைய ஒளிபரப்பில்) கண்டுகளிக்கலாம்.
இதனிடையே, கொரிய சினிமா ரசிகர்களுக்கு, புதிய நிகழ்ச்சிகளான Monster, Jackpot போன்றவை கொரியாவில் வெளியாகும் அன்றையே தினமே, இங்கு மலேசிய ரசிகர்களும் கண்டுகளிக்கலாம்.
மேலும், ஹாங் காங் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான Blue Veins, The Last Healer in Forbidden City ஆகியவற்றையும் அந்நாட்டு நேரப்படி, ஆன் டிமாண்ட் சேவையின் மூலமாக அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.
குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவை வழங்குகின்றது. உதாரணமாக Disney Junior, Disney Channel, Cartoon Network, Little MerMaid, Jake and the Never Land Pirates, Mickey Mouse, Clubhouse, Phineas & Ferb, Hi-5, Sofia the First and We Bare Bear among others ஆகிய நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கென்று ஆன் டிமாண்ட் (On Demand) சேவை வழங்கப்படுகின்றது. எளிதாகக் கூறவேண்டுமானால் பிவிஆர் (Personal Video Recorder) -ஐ உங்களது வீட்டு கட்டற்ற இணைய சேவை (Wifi) உடன் இணைத்தோ அல்லது அஸ்ட்ரோ ஆன் தி கோ (Astro on the Go – AOTG) மூலம் உங்கள் திரையில் தேர்வு செய்து ஆன் டிமாண்ட் சேவையைப் பயன்படுத்தியோ நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை, அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஆன் டிமாண்ட் ப்ளஸ் (OD Plus)-க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.