Home Featured வணிகம் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக சரிவு!

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக சரிவு!

923
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அனைத்துலக சந்தையில் தொடர்ந்து சரிந்து வருகின்றது. இன்று நான்காவது நாளாக சரிவைச் சந்தித்த மலேசிய ரிங்கிட், கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து இறங்குமுகமாக சரிந்து வருகின்றது.

1எம்டிபி தொடர்பான பணப் பத்திரம் மீதிலான வட்டியைச் செலுத்த அந்நிறுவனம் தவறியதைத் தொடர்ந்து, ரிங்கிட் மதிப்பு சரிகின்றது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ringgit-photoமலேசிய பங்கு சந்தையும் இறங்குமுகமாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அபுதாபி நிதி நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட 1.75 பில்லியன் அமெரிக்க டாலர் பணப் பத்திரம் மீதான 50 மில்லியன் அமெரிக்க டாலர் வட்டியைக் கட்டுவதற்கு 1எம்டிபியால் இயலவில்லை. இந்தப் பணப் பத்திரங்கள் 2022ஆம் ஆண்டில் முதிர்ச்சி அடையவிருக்கும் நிலையில், மலேசிய அரசு நிறுவனம் ஒன்று வட்டி கட்ட இயலாத சூழ்நிலையால், நாட்டின் நிதி நிலைமை மீதிலான மதிப்பும், நம்பகத்தன்மையும் பாதிப்படைந்துள்ளதாகவும், பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஓர் அமெரிக்க டாலருக்கு 3.9245 ரிங்கிட் என்ற அளவில் நாணய வர்த்தகம் நடைபெற்று முடிந்தது.

பணப் பத்திரத்துக்கான வட்டியைச் செலுத்தத் தேவையான 50 மில்லியன் அமெரிக்க டாலர் தங்களின் கையிருப்பில் இருப்பதாகக் கூறியுள்ள 1எம்டிபி, இருப்பினும் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டியது அபுதாபி நிதி மையம்தான் எனக் கூறியுள்ளது.