Home Featured தமிழ் நாடு மிடாஸ் மது ஆலையால்தான் ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மிடாஸ் மது ஆலையால்தான் ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

677
0
SHARE
Ad

jayalalithaa-l-ptசென்னை – மிடாஸ் மது ஆலையைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின். அதன்படி, இன்று அவர் கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அங்கு அவர் ஓட்டு சேகரிக்க உள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின் கூறியதாவது, ‘திமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது’ என்றார்.

#TamilSchoolmychoice

மேலும், ‘அதிமுக போல் நட்சத்திரங்களை வைத்து திமுக பிரச்சாரம் மேற்கொள்ளாது’ எனக் கூறிய ஸ்டாலின், மிடாஸ் மது ஆலையைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக குற்றம் சாட்டினார்.