Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி: ‘வாசுகி’ வெற்றி வாகை சூடியது!

அஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி: ‘வாசுகி’ வெற்றி வாகை சூடியது!

1105
0
SHARE
Ad

Astro Vanavilகோலாலம்பூர் – புதிய மற்றும் இளைய படைப்பாளிகளை அடையாளம் காணும் முயற்சியாக  அண்மையில் குறும்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது அஸ்ட்ரோ வானவில்.

குறும்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக இப்போட்டி அமைக்கப்பட்டிருந்தது.

18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட திறமையான இளம் படைப்பாளிகளை அடையாளம் காண்பதோடு, அவர்களுக்கான அங்கீகாரத்தையும் சன்மானத்தையும் வழங்க வேண்டும் என்ற தலையாய நோக்கத்தில், அஸ்ட்ரோ இந்தியப் பிரிவு இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

#TamilSchoolmychoice

சென்ற ஆண்டு 23 நவம்பர் முதல் இவ்வாண்டு 12 ஜனவரி வரை நடைபெற்ற இணைய பதிவுகளில் மொத்தம் 80 குறும்படங்கள் கலந்து கொண்டன.

ஆனால், 45 நுழைவுகள் அடிப்படை விதிகளைப் பூர்த்தி செய்யாததால் எஞ்சிய  35 குறும்படங்கள் மட்டுமே போட்டிக்கு தகுதியானவையாக இருந்தன.

அதிலிருந்து சிறந்த 10 குறும்படங்கள், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்-நடிகை, சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, ஜூரி விருது என 17 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எல்லா குறும்படங்களும் கதை/எண்ணம், தயாரிப்பு வடிவமைப்பு, காட்சி மற்றும் ஒலி அமைப்பு,  படத்தொகுப்பு ஆகிய அடிப்படையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டது.

வெற்றிப் பெற்ற குறும்படங்கள் :

முதல் பரிசு (ரி.ம. 10,000)                         : வாசுகி

இரண்டாம் பரிசு (ரி.ம. 7,000)               : நைன் 10

மூன்றாம் பரிசு (ரி.ம. 5,000)                  : பில்ஸ்

ஆறுதல் பரிசு (ரி.ம. 2,500)                      : (கா-லீ, 2 மினிட்ஸ் கிடைக்குமா, பாமரன், முகவரித் தேடி, நடுநிசிப் பயணம், உறவாடும் சொந்தம், என்னைத் தெரியுமா?)

சிறந்த இயக்குநர் (ரி.ம. 1,500)             : வாசுகி (விவேந்திரா ஹென்ட்ரி)

சிறந்த ஒளிப்பதிவு (ரி.ம. 1,500)           : வாசுகி (அறிவிந்தரன் வள்ளிதன்)

சிறந்த படத்தொகுப்பு (ரி.ம. 1,500)   : வாசுகி (அறிவிந்தரன் வள்ளிதன்)

சிறந்த ஒலி அமைப்பு (ரி.ம. 1,500)    : காலீ (ஹேக்னராஜா தங்கவேலு)

சிறந்த நடிகர் (ரி.ம. 1,500)                        : பாமரன் (அன்புக்கரசன் மொரொடெர்)

சிறந்த நடிகை (ரி.ம. 1,500)                     : முகவரித் தேடி (பிரியங்காஸ்ரீ வெங்காடசலம்)

ஜூரி விருது (ரி.ம. 1,500)                          : பொணம் சைக்கிள்ள போது (கிருபாநாதன்) கருணாகரன்)

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவுக்கான தலைவர் டாக்டர் இராஜாமணி, பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், சினிமா விமர்சகர் ஹசான் முத்தாலிப், பினாஸ் இயக்குநர் டத்தோ கமீல் ஓத்மான் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

“போட்டியில் கலந்து கொண்ட எல்லா இளைஞர்களும் மிக தரமான படைப்புகளை வழங்கியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புகளும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் அமைந்திருந்தது.”

“இம்மாதிரியான போட்டிகளில் இன்றைய இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அதோடு, நாளைய படைப்பாளிகளை இப்போதே அடையாளம் கண்டு அவர்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்த முடிகிறது.” என்று அஸ்ட்ரோ வானவில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வரும் ஜூன் 4 முதல் சனிக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு இக்குறும்படங்கள் அனைத்தும் அலைவரிசை 201-ல் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.