Home Featured நாடு லிம் குவான் எங் இல்லத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடிப் பரிசோதனை!

லிம் குவான் எங் இல்லத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடிப் பரிசோதனை!

768
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தங்கியிருக்கும் ஜாலான் பின்ஹோர்ன் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அதிரடி பரிசோதனை நடத்தினர்.

lim-guan-eng-1-620x3201லிம் குவான் எங்கும், அவரது மனைவி பெட்டி சியூ ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை விட்டு பிற்பகல் 2.55 மணியளவில் வெளியேறினர் எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் லிம்மின் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.என்.ராயர் மற்றும் ராம்கர்ப்பால் சிங் டியோ ஆகியோரும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடன் லிம்மின் இல்லம் வந்தனர்.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில் லிம் குவான் எங் தனது நேற்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டார்.

லிம் குவான் எங் 2.8 மில்லியன் விலையில் பங்களா வாங்கியது தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.