Home Featured நாடு மக்கள் ஓசை நிர்வாகி பாலராஜாவின் புதல்வர் காலமானார்!

மக்கள் ஓசை நிர்வாகி பாலராஜாவின் புதல்வர் காலமானார்!

653
0
SHARE
Ad

car-accident-graphic photoகோலாலம்பூர் – மக்கள் ஓசை நாளிதழின் நிர்வாகி எஸ்.பாலராஜாவின் புதல்வர் பிரேம் கணேஷ் நேற்று பின்னிரவில் நடந்த கார் விபத்தில் காலமானார். அவருக்கு வயது 21.

பாலராஜா, முன்னாள் மஇகா தேசியத் துணைத் தலைவரும், துணையமைச்சருமான டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றியவருமாவார்.

பாலராஜாவின் புதல்வர் பிரேம் கணேஷ் ஓட்டிச் சென்ற கார் சாலையோர தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் மரணமுற்றார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அவருடன் அதே காரில் பயணம் செய்த அவரின் நண்பர்கள் மூவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேம் கணேஷின் இறுதிச் சடங்குகள் நாளைக் காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் உள்ள பாலராஜா இல்லத்தில் நடத்தப்படும்.

B-17-13, Palm Court Apartments

Jalan Berhala, Brickfields

50470 Kuala Lumpur 

அதன்பின்னர் அவரது நல்லுடல் அங்கிருந்து செராஸ் மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.